ஜூலை 1 வருவாய் துறை தினம்: அரசு அறிவிப்பு
சென்னை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணை:
'பசலி' என்ற அரேபிய சொல்லிற்கு, 'அறுவடை' என்று பொருள். பசலி ஆண்டு என்பது, அறுவடை சார்ந்த நாட்காட்டியை குறிப்பதாகும்.
இது ஆண்டுதோறும் ஜூலை 1ல் துவங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30ல் நிறைவடைகிறது. இந்த முறை, முகலாய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வரை பின்பற்றப்படுகிறது.
நில வருவாய் நிர்ணயம், கிராம கணக்கு பதிவேடு தரவுகள் என, வருவாய் துறையின் பல்வேறு பணிகளில், பசலி ஆண்டு முறை பின்பற்றப்படுகிறது.
வருவாய் துறையின் இன் றியமையாத சேவையை அங்கீகரிக்கும் வகையில், 'பசலி' ஆண்டின் முதல் நாளான, ஜூலை 1ம் தேதி, 'வருவாய் துறை தினமாக' கடைப்பிடிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
-
பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் வனவிலங்குகள்' ஜீரண பிரச்னையால் பலியாகும் அவலம்
-
ரூ.10 கோடியில் பாலம் இணைப்பு சாலை திறப்பு 60 ஆண்டு கால கனவு நனவானது
-
மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
-
பாய்லர் வெடித்து சிறுமி பலி குடும்பத்தினர் மூவர் காயம்
-
ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்
Advertisement
Advertisement