மாணவ -- மாணவியருக்கான மன்ற போட்டிகளில் 250 பேர் பங்கேற்பு
காஞ்சிபுரம்:பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான, மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் துவக்க விழா காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி மாணவ - மாணவியருக்கான திறன் சார்ந்த போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வண்ணக் குடைகளில் மன்றப் போட்டிகளின் விபரங்கள் பொறிக்கப்பட்டு, நிகழ்ச்சி துவங்கியது.
முதன்மை கல்வி அலுவலர் நளினி விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 6, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வினாடி - வினா மன்றம் உள்ளிட்ட மன்ற பிரிவுகளில், கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், கவிதை எழுதுதல், கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் எழில், கோமதி, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், பள்ளி துணை ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
-
மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
-
பாய்லர் வெடித்து சிறுமி பலி குடும்பத்தினர் மூவர் காயம்
-
ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்
-
பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்
-
மாவட்ட மாரத்தான் போட்டி கல்லுாரி மாணவி முதலிடம்
-
52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு