இங்கிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி: இலங்கையை தோற்கடித்தது

கொழும்பு: கேப்டன் நாட் சிவர்-புருன்ட் சதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி, 89 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
கேப்டன் அபாரம்: இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமன்ட் (32), ஹீதர் நைட் (29) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் நாட் சிவர்-புருன்ட், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். உதேஷிகா வீசிய கடைசி ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய இவர், 117 ரன்னில் (2x6, 9x4) ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 253/9 ரன் எடுத்தது.
சோபி அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்மி (10) ஏமாற்றினார். சோபி எக்லெஸ்டோன் பந்தில் ஹாசினி (35), ஹர்ஷிதா (33) அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய சோபி 'சுழலில்' கவிஷா (4), கேப்டன் சமாரி (10) சிக்கினர். நாட் சிவர்-புருன்ட் பந்தில் அனுஷ்கா (10), தேவ்மி (3) ஆட்டமிழந்தனர். நிலாக் ஷிகா (23) ஆறுதல் தந்தார். சுகந்திகா (4), உதேஷிகா (0) ஏமாற்றினர்.
இலங்கை அணி 45.4 ஓவரில் 164 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இனோகா (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் சாய்த்தார்.
கேப்டன் காயம்
லின்சி ஸ்மித் வீசிய 6வது ஓவரில் 3வது பந்தில் ரன் எடுக்க ஓடிய போது இலங்கை கேப்டன் சமாரியின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மைதானத்தில் படுத்த இவரை, 'ஸ்டிரெச்சரில்' துாக்கிச் சென்றனர். சிகிச்சைக்கு பின், மீண்டும் களமிறங்கினார்.
முதலிடம்
உலக கோப்பை (50 ஓவர்) அரங்கில் அதிக சதம் விளாசிய வீராங்கனையானார் இங்கிலாந்தின் நாட் சிவர்-புருன்ட். இதுவரை 5 சதம் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேனட் பிரிட்டின், சார்லோட்டி எட்வர்ட்ஸ் (தலா 4 சதம்) உள்ளனர்.
* அதிக சதம் விளாசிய இங்கிலாந்து வீராங்கனைகள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் நாட் சிவர்-புருன்ட் (10 சதம்). முதலிடத்தில் டாமி பியூமன்ட் (12 சதம்) உள்ளார்.
மேலும்
-
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பசுமை ஹைட்ரஜன் அங்கீகாரம்
-
அவமதித்த அ.தி.மு.க., -- மா.செ.,வால் தி.மு.க.,வுக்கு தாவிய 4 கவுன்சிலர்கள் பட்டுக்கோட்டையில் பரபரப்பு
-
காஸ் டேங்கர் ஸ்டிரைக் அதிகாரிகள் பேச்சு தோல்வி
-
பிரதமர் மோடியுடன் 'குவால்காம்' சி.இ.ஓ., சந்திப்பு
-
நிலத்திற்கு இழப்பீடு வழங்க தாமதம் 'டாஸ்மாக்' வருமானத்தை 'டிபாசிட்' செய்ய உத்தரவு
-
'கியூ.ஆர்., கோடு' மூலம் போலீசுக்கு வார விடுப்பு