மெத்தபெட்டமைன் பறிமுதல் 8 பேர் கைது
திருப்பூர்:திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காங்கயம் ரோட்டில், இரு கார்களில் வந்தசிலரின் நடவடிக்கை சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, தெற்கு போலீசார் அப்பகுதியில் சென்று கண்காணித்தனர். அவ்வழியில் இரு கார்களில் வந்த, எட்டு பேரிடம் விசாரித்தனர்.
அவர்களிடம், உயர் ரக போதை பொருளான, மெத்தபெட்டமைன் இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக, அபுஹரேரா, 24, சையத் முஹமது, 24, யாசர் அராபத், 24, கார்த்திக்ராஜா, 23, செந்தில்நாதன், 23, முகமது ஆசிப், 27, நாகராஜ், 18, தனுஷ், 18 ஆகியோரை கைது செய்து, ஐந்து கிராமை பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில், பெங்களூரில்இருந்து விற்பனைக்காக மெத்தபெட்டமைன் வாங்கி வந்தது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement