ஸ்ரீவிக்னேஸ்வரா வித்யாலயா மாணவி தட்சணா சாதனை

திருப்பூர்:சென்னையில் நடந்த இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடந்த 14 வயதினர் பெண்கள் பிரிவிற்கான வில்வித்தை போட்டியில் பெருமாநல்லுார், பாலசமுத்திரம் ஸ்ரீவிக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தட்சணா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
அடுத்த மாதம் முதல் வாரம், உ.பி., மாநிலம், வாரணாசியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கான தகுதிச்சான்றிதழை பள்ளி தாளாளர் மூலம் மாணவி பெற்றுக்கொண்டார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தாளாளர், முதல்வர் ஆசிரியர், மாணவர்கள் வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement