வரிசை கட்டி நிற்கும் வாரிசுகள்: பீஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு?

வாரிசு அரசியலுக்கு ஆதரவு தரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் யார் இதைக் காது கொடுத்து கேட்கின்றனர்? இந்தியாவின் முதல் வாரிசு அரசியலை ஆரம்பித்தவர் நேரு.
அவருடைய மகள் இந்திரா, இவரின் மகன் ராஜிவ், அவரது மகன், மகள், மனைவி என, வாரிசு அரசியல் தொடர்கிறது. தமிழகத்தில் தி.மு.க.,வில் இப்போது இன்பநிதி வரை, வாரிசு அரசியலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம்; ஆந் திராவில் ராஜசேகர் ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி; தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு வின் மகன் நாரா லோகேஷ், இப்போது அமைச்சர்; தெலுங்கானாவிலும் இதே நிலை.
பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்திலும் வாரிசு அரசியல் இப்போது ஆரம் பித்துவிட்டது. பீஹாரில் இந்த கூட்டணி ஆட்சியில், நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். அடுத்த மாதம் இங்கு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலை யில், 'நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும்' என, கட்சி தொண்டர்கள் வேண்டுகோள் வைத்து உள்ளனர்.
நிதிஷ் குமாருக்கு வயதாகிவிட்டது; அடிக்கடி ஞாபக மறதியும் கூட. இதனால், தன் மகனை அரசியலில் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னவுட் தொகுதி யில் நிதிஷ் மகன் போட்டியிடுவார்' என, சொல்லப் படுகிறது. கூட்டணி வெற்றி பெற்றால், இவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி உண்டு.
எதிர்பக்கம் லாலுவின் மகனும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் எப்படியாவது தங்களுடைய கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என, பாடுபட்டு வருகிறார். இந்த முறை, இவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. ராகோபூர் இவருடைய தொகுதி; இருப்பினும் பூல்பரஸ் என்ற தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார். காரணம், அந்த தொகுதியில் அதிக அளவில், ஓ.பி.சி., சமூகத்தினர் வசிக்கின்றனர்.
'தன் கட்சி வெறும் யாதவ், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், ஓ.பி.சி.,க்கும் உழைக்கிறது' என நிரூபிக்கவே, இங்கு போட்டியிடப் போகிறாராம். எது எப்படியோ... இந்தியா முழுதும் இந்த வாரிசு அரசியல் தங்கு தடையின்றி பரவிக் கிடக்கிறது.

மேலும்
-
எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு
-
பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளை கைப்பற்றியது தலிபான் ராணுவம்!
-
ஓயாத நோபல் அமைதிப்பரிசு சர்ச்சை; விருதாளர் பெயர் முன்கூட்டியே கசிந்து விட்டதாக புகார்!
-
ஆபரேஷன் புளூஸ்டார் தவறு; சிதம்பரம் ஒப்புதல்!
-
மெக்சிகோவில் விடாது பெய்யும் மழை: பலி 41 ஆக உயர்வு
-
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் கைது