தெலுங்கானா முதல்வருக்கு எதிரான அவதுாறு: பெண் பத்திரிகையாளர்களை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவுசெய்த விவகாரத்தில், பெண் பத்திரிகையாளர்களை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
தெலுங்கானாவின் ஆளும் காங்கிரஸ் மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் தான்வி யாதவ் ஒரு நபரை நேர்காணல் செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 12 ஆம் தேதியன்று இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் முதலில் கைது செய்யப்பட்டு 5 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பல்ஸ் நியூஸ் தலைவர் போகதண்ட ரேவதி மற்றும் அதே சேனலின் நிருபர் தன்வி யாதவ் ஆகியோர், அக்டோபர் 14ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
தங்கள் மீதான வழக்கிற்கு தடை கோரியும், தங்களை மீண்டும் கைது செய்ய தடை கோரியும் மனு தாக்கல் செய்தனர்
இந்த வழக்கு இன்று நீதிபதி சந்தீப் மேத்தா விக்ரம் நாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது.
மேலும்
-
நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
-
நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்
-
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
-
பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டிய மஹாராஷ்டிரா நபர் கைது
-
5 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' : வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு
-
கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி: தாயை காட்டிக்கொடுத்த 8 வயது மகன்