குற்ற வழக்கில் சிக்கியவர் திருச்சி ஏர்போர்ட்டில் கைது
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த வாலிபர், குற்றவழக்கில் தொடர்புடையவர் என்று தெரிய வந்ததால், அவர் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், நீலகண்டி ஊரணியைச் சேர்ந்தவர் குபேந்திரன், 25. இவர் கடந்த, 2022ம் ஆண்டு கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர். போலீசாருக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதனால் இவரது பாஸ்போர்ட் குறித்த விவரங்கள் அனைத்து விமான நிலையங்களிலும் அளிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குபேந்திரன் நேற்று முன்தினம் காலை, மலேசியாவில் இருந்து பாடிக் விமானம் மூலம், திருச்சி வந்தார். அவரது பாஸ்போர்ட் விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் தேடப்படும் குற்றவாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து குபேந்திரனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மேலும்
-
விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்: அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை
-
டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை
-
பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப்!
-
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!
-
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை
-
பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்