'தோஷிபா இந்தியா' ஜப்பானில் ரூ.3,200 கோடி முதலீடு

புதுடில்லி :'தோஷிபா எனர்ஜி சிஸ்டமஸ் அண்டு சொல்யூஷன்ஸ்' நிறுவனம், வரும் 2027 மார்ச் மாதத்துக்குள் ஜப்பான் மற்றும் இந்தியாவில் கிட்டத்தட்ட 3,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் கடந்தாண்டு அறிவித்த 1,180 கோடி ரூபாய் முதலீடும் அடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த இந்நிறுவனம், மின்சார பரிமாற்றம் மற்றும் வினியோக உபகரண வணிகத்தை விரிவுபடுத்துவதில் இந்த முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலும் தனக்குள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை கடந்த 2023 - 24ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், வரும் 2029 - 30 நிதியாண்டில் இரட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தோஷிபா தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டை பொறுத்தவரை ஹைதராபாதில் உள்ள ஆலையின் விரிவாக்கத்தில் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்: அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை
-
டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை
-
பாக்.,- ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: சொல்கிறார் அதிபர் டிரம்ப்!
-
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!
-
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை
-
பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்
Advertisement
Advertisement