மருமகளை உயிருடன் எரித்த வழக்கு: 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை

ராஞ்சி: ஜார்க்கண்டில் மருமகளை உயிருடன் எரித்த வழக்கில், 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜார்கண்டில் அனிதா தேவி என்பவர், மகன், மருமகளுடன் வசித்துவந்த நிலையில் கடந்த 2022 ஏப்ரல் 23, அன்று மருமகள் கவிதா தேவியுடன், அனிதா தேவிக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில், வீட்டிற்கு அருகே காய்ந்த வைக்கோல் குவிக்கப்பட்டு அங்கு அனிதா தேவி தீயை மூட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த கவிதா தேவியின் சேலையில் பட்டு மளமளவென தீ பற்றியது.
உதவிக்காக கதறிய நிலையில், ஆனால் யாரும் அவரைக் காப்பாற்ற வரவில்லை, பின்னர் சிலர் தீயை அணைத்தனர். இந்நிலையில் அவர் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறப்பதற்கு முன் தனது வாக்குமூலத்தை அளித்தார். அதனை தொடர்ந்து சர்வான் காவல் நிலையத்தில் எப்ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கடந்த 2025, மார்ச் அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று கூடுதல் அமர்வு நீதிபதி-பிரிவு(3) ராஜேந்திர குமார் சின்ஹா தலைமையில் விரைவான விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கியது.
நீதிபதி அளித்த உத்தரவில்,
குற்றவாளி அனிதா தேவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அவர் இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும்
-
ஸ்கூட்டர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
-
'புல்லட்' மீது மோதிய ஆம்னி பேருந்து கணவர் கண்ணெதிரே மனைவி பலி தீபாவளி ஷாப்பிங் சென்று திரும்புகையில் துயரம்
-
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்
-
உணவில் தலைமுடி: விமான நிறுவனம் பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
-
நவ., 3ல் துவங்குது புத்தாக்க மாநாடு