பழநி அருகே வெடி பொருட்கள் கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
நெய்க்காரப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அழகாபுரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவில் வந்த மூவரிடமிருந்து டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
அழகாபுரி அருகே வண்டி வாய்க்கால் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரள பதிவு எண் ஆட்டோவில் 3 பேர் வந்தனர். சோதனையில் ஆட்டோவிலிருந்த 25 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்த கிரீஸ் 42, லியோ தாஸ் 40, ஜோப்பின் 35, நெய்க்காரப்பட்டி வடக்கு தாதநாயக்கன்பட்டி கல்குவாரியில் பாறைகளுக்கு வெடி வைக்கும் பணியில் ஈடுபட வந்திருந்தனர். பணி முடிந்து டெட்டனேட்டர் வெடிபொருட்களை கேரளா மாநிலம் இடுக்கிக்கு எடுத்து சென்றது தெரியவர மூவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெமிமா சதம்: பைனலில் இந்தியா
-
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
-
மோசமான வானிலை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
ஓட்டுக்களை திருட முயற்சிப்பார்கள்: ராகுல் பேச்சு
-
இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...
-
பீஹார் தேர்தல் களத்தில் 'போலீஸ் சிங்கங்கள்'
Advertisement
Advertisement