பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
பாட்னா: பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும், பீஹார் தேர்தலுக்குப் பிறகு மஹா கூட்டணி காணாமல் போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி, லக்கிசராயில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அவர் பிரதமரை மட்டுமல்ல, சத்தி மாயாவையும் (சூரிய கடவுள்) இழிவுபடுத்தியுள்ளார். சத்தி மாயாவை வழிபடுபவர்களை நாடகமாடுபவர்கள் என்று ராகுல் கூறுகிறார். சூர்ய கடவுளின் முக்கியத்துவத்தையும், நம்பிக்கையையும் நீங்களும், உங்கள் தாயாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமான வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பாருங்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பினர். அப்போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் மோடியின் தாயாரை அவமதித்தனர். நீங்கள் மோடியை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். மேலும், நீங்கள் சூரியகடவுளையும் தற்போது அவமதித்துள்ளீர்கள்.
நவம்பர் 14ம் தேதி பெட்டிகள் (ஓட்டு எண்ணிக்கை) திறக்கப்படும் போது, உங்கள் கூட்டணி முழுவதுமாக துடைத்தெறியப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (14)
Rathna - Connecticut,இந்தியா
30 அக்,2025 - 21:04 Report Abuse
உங்கள் வெற்றி என்பது ராகுல் காந்தி அதிக அளவு பிரச்சாரம் செய்வதில் இருக்கிறது. 0
0
Reply
Sivakumar - Salem,இந்தியா
30 அக்,2025 - 19:31 Report Abuse
முதலில் எங்கம்மாவ அவமதிச்சிட்டாங்கனு ஒரு நாடகம். அதை யாரும் கண்டுக்கல. அதுனால இப்ப என்னையே அவமதிச்சிட்டானுக னு அடுத்த நாடகம். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த காந்தி, இந்திரா, ராஜிவ் என எல்லாரையும் நீங்க அவமதிக்கும்போதே அமைதியாக இருந்த மக்கள் இப்ப உங்களுக்காக அதைவிட அமைதியாக இருப்பார்கள். 0
0
Reply
Sivakumar - Salem,இந்தியா
30 அக்,2025 - 18:52 Report Abuse
இதே பிரதமர் பதவியிலிருந்த மன்மோகனை மவுன் மோகன் என அவமதிக்கும் போது இதெல்லாம் வரும் என்று தெரியாதா ? நமக்கு வந்தால் ரத்தம், காங்கிஸ்சுக்கு வந்தால் தக்காளி சாட்னியா ? 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30 அக்,2025 - 18:02 Report Abuse
ராகுல் காந்தி பேசியதை பீகார் மக்கள் பார்த்து கொள்வார்கள் நீங்கள் நிதிஷ் குமார் மற்றும் உங்கள் கூட்டணியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே 0
0
Abdul Rahim - ,இந்தியா
30 அக்,2025 - 18:36Report Abuse
சாதனை இருந்தா தானே சொல்வதற்கு அதற்குத்தான் இந்த அழுவாச்சி நாடகம். 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
30 அக்,2025 - 16:33 Report Abuse
அப்போ வீடியோ மூஞ்சி அரசு புட்டுக்கும்னு நீங்களே சொல்றீங்க. எப்படி பாஸ் இப்படி சொன்ன இருநூறு கைவிட்டு போய்டுமே. காசு துட்டு மணி மணி முக்கியமாச்சே ஜால்ரா அடிச்சே பிழைப்பு நடத்துற குடும்பம் அநேகம் இங்கு .. 0
0
மனிதன் - riyadh,இந்தியா
30 அக்,2025 - 20:11Report Abuse
ஜால்ரா அடிச்சே பிழைப்பு நடத்துற குடும்பம் அநேகம் இங்கு////........அதுல நீங்களும் ஒன்னு... 0
0
Reply
மனிதன் - riyadh,இந்தியா
30 அக்,2025 - 15:59 Report Abuse
எதிர்கட்சித்தலைவரை "பப்பு" என்று சொல்லி அவமதிக்கும்போதெல்லாம் உங்களுக்கெல்லாம் இனித்தது... பப்புவின் பக்குவமும், அரவணைப்பும் , சமத்துவமும், சமூகநீதியும், நாட்டைப்பற்றிய கவலையும் உங்களிடமெல்லாம் இருந்திருந்தால் நாடு நலம்பெற்றிருக்கும்....மக்களும் நலம் பெற்றிருப்பார்கள்... நீங்களும் இப்படி புலம்பி வாக்கு கேக்கவேண்டிய அவசியமிருந்திருக்காது... 0
0
Reply
Vasan - ,இந்தியா
30 அக்,2025 - 14:35 Report Abuse
If BJP alliance victory result is already known, why waste money and conduct elections? Waste of money and time, in the name of democrazy. 0
0
தலைவன் - chennai,இந்தியா
30 அக்,2025 - 15:03Report Abuse
அதெல்லாம் பழைய கதை.
இப்போவெல்லாம் மக்கள் அறிவோடு நன்கு சிந்தித்துதான் வாக்களிக்கிறார்கல் என்பதை அதே நவம்பர் பதிநான்கில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். சூரியனின் சக்தியை மட்டுமல்ல மக்களோட பகுத்தறிவின் சக்தியை வாக்கின் வலிமையை அப்போது அறிந்து கொள்வீர்கள் 0
0
vivek - ,
30 அக்,2025 - 16:42Report Abuse
we want to see who loses this election and not the winner 0
0
Reply
Raja k - ,இந்தியா
30 அக்,2025 - 14:09 Report Abuse
நீங்கள் யாருக்குதான் மதிப்பு அளித்துள்ளீர்கள்? 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
30 அக்,2025 - 14:09 Report Abuse
பாவம் விஜய் இவர்களிடத்தில் படாத பாடு படுகிறார் 0
0
vivek - ,
30 அக்,2025 - 16:41Report Abuse
காலமெல்லாம் இருநூறு வாழும் கொத்தடிமை திகழ் போல வாழவேண்டும் 0
0
Reply
மேலும்
-
ஜெமிமா சதம்: பைனலில் இந்தியா
-
மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
-
மோசமான வானிலை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
ஓட்டுக்களை திருட முயற்சிப்பார்கள்: ராகுல் பேச்சு
-
இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...
-
பீஹார் தேர்தல் களத்தில் 'போலீஸ் சிங்கங்கள்'
Advertisement
Advertisement