தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
சென்னை: சென்னையில் இன்று (நவ., 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 30) காலை தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் மாலை தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று (அக் 31) தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (நவ.1) மாதத்தின் முதல் நாளான தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் வாங்குவதை சற்று காலம் எல்லோரும் தள்ளி வைத்தாலே தன்னாலே குறையும்.
கூடுவது ரூபாய் 100, குறைவது 20 ரூபாய். இந்த விலை குறைப்பை ஊடகங்கள் வெளியிடும் விதம் மக்களை தூண்டும் வகையில் அமைகிறது.
அனைவரும் சற்று சிந்தித்தால் தங்க விலையை குறைக்க முடியும்.
தங்கம் விலை குறைய வேண்டும்மேலும்
-
அமெரிக்காவில் ரூ.4,200 கோடி கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு
-
கருணை அடிப்படையிலான பணி மனைவிக்கா; மாமியாருக்கா? குழப்பத்தை தீர்த்த ஐகோர்ட்
-
2026ல் சீனாவில் நடக்கிறது 'ஏபெக்' உச்சி மாநாடு
-
ஏ.டி.எம்., கட்டணத்தை உயர்த்தியது தபால் துறை
-
நீதிமன்றத்திற்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி கோர்ட் புறக்கணிப்பு
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பொம்மிடியில் பயிற்சி வகுப்பு