காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
மும்பை: கொழும்புவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானப் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்ததில், 9 காபி பாக்கெட்டுகளில் கோகைன் கடத்தி வந்தது தெரிய வந்தது.
சுமார் 4.7 கிலோ எடை கொண்ட இந்த கோகைனின் மதிப்பு ரூ.47 கோடியாகும். இதைத் தொடர்ந்து, இந்தப் போதைப் பொருளை எடுத்து வந்த பெண் பயணி, இவரை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்த நபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
I appeal to various state governments to stop sale of liquor, not minding the revenue to the exchequer because of such liquor sale.
அடேங்கப்பா 9 பாக்கெட் 47 கோடி
இதுவே தமிழ்நாட்டிற்கு வந்திருந்தா திராவிட மூடல் பாதுகாப்பா பதுக்கியிருக்கும்
தயவு செய்து விசாரணை செய்து தடவை வேஸ்ட் பண்ண வேண்டாம், தூக்கில் போட்டுவிடவும். ஏன் ? வெளி நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் தூக்கில் போடுவது சாதாரணம். இவர்களை வெளியே விட்டால் எத்தனை குடும்பங்கள் அழியும் ?
இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டிய விஷயம். தவறும் பட்சத்தில் இளம் தலைமுறையினரை சீரழித்து வளர்ந்து வரும் நமது தேசத்தை பாதிக்கும். இது உள்நாட்டு வெளிநாட்டு சதியாக கூட இருக்கலாம். சுதாரித்தால் கோடி நன்மை.மேலும்
-
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
-
தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
-
நீர் வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பு, கழிவுகளால் பாதிப்பு; மண்வளம், நீர்வளம் மாசுபடும் அபாயம்
-
'உலகை' வெல்லுமா இந்தியா... பைனலில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
-
சுள்ளக்கரை ஓடையை அகலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல் - கூடலுாரில் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை
-
மழையால் நெல் நடவு பணி தீவிரம்