விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
ஒட்டாவா: அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் குறித்த விளம்பரத்துக்காக அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தது. ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் கனடாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987 ம் ஆண்டு ஆற்றிய உரைகளில் சில குறிப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.
கனடா உடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாகவும், அந்நாட்டு பொருட்களுக்கு வரியை அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார். மேலும் அவரை சந்திக்க விருப்பம் இல்லை எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விளம்பரத்துக்காக அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக மார்க் கார்னி கூறியுள்ளார். தென் கொரியாவில் ஆசியா பசுபிக் மாநாட்டிற்கு இடையே தென் கொரிய அதிபர் அளித்த விருந்தின் போது டிரம்ப்பிடம் தனிப்பட்ட முறையில் மார்க் கார்னி மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கேட்டால், ஏதாவது பலன் கிடைக்குமா?மேலும்
-
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
-
தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
-
நீர் வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பு, கழிவுகளால் பாதிப்பு; மண்வளம், நீர்வளம் மாசுபடும் அபாயம்
-
'உலகை' வெல்லுமா இந்தியா... பைனலில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
-
சுள்ளக்கரை ஓடையை அகலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல் - கூடலுாரில் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை
-
மழையால் நெல் நடவு பணி தீவிரம்