மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
புதுடில்லி: ஆந்திராவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை ஜனாதிபதி சி.பி.,ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிர் இழப்பு மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்
-
அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்
-
அரசு நிர்வாகம் முடக்கம்: விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்கிறார் டிரம்ப்
-
அசாருதீனுக்கு அமைச்சர் பதவி; காங்கிரஸ் முடிவுக்கு பலன் கிடைக்குமா?
-
ஜெயலலிதா இருந்திருந்தால் செங்கோட்டையனுக்கு எம்.எல்.ஏ., பதவி கூட கிடைத்திருக்காது: பழனிசாமி
-
வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்
-
புகழ்ந்து பேசினால் தான் இங்கே புத்தகம் விற்க முடியும்; பதிப்பாளர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை!