பராமரிப்பு இல்லாத ராஜாங்குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
பெரியாநத்தம்: செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப்பின்றி உள்ள ராஜாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பெரியாநத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், பெரியாநத்தம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் அருகில் ராஜாங்குளம் உள்ளது.
இக்குளம் அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், இக்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 2021ம் ஆண்டு, 12 லட்சத்து 52,729 ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டது. இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயிலும், குளத்திலும் செடி, கொடிகள், வளர்ந்துள்ளன.
இதனால், கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு குளம் முழுமையாக நிரம்பவில்லை. எனவே, செடி, கொடிகள் வளர்ந்து வீணாகும் ராஜாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பெரியாநத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்
-
இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்; தினமலர் இணையதளத்தில் லைவ் பாருங்க!
-
மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
-
திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு