ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பொம்மிடியில் பயிற்சி வகுப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியின், 'வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தம் - 2025' பணிகள் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு, நேற்று பொம்மிடி தனியார் பள்ளியில் வாக்காளர் பதிவு அலுவலர் கதிரேசன் தலைமையில் நடந்தது.
இதில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை பின்பற்றி, உரிய அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் இருந்து விடுபடக்கூடாது என்றும், தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது எனவும், அறிவுரை வழங்கப்பட்டது. பயிற்சியின் போது பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா, தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, தேர்தல் முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நைஜீரியா மீது தாக்குதல் நடத்துவேன்; டிரம்ப் எச்சரிக்கை
-
வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது; ஞானேஷ்குமார் திட்டவட்டம்
-
பீஹார் குளத்தில் மீன்பிடித்த ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பு
-
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி உறுதி
-
டிம் டேவிட் ருத்ரதாண்டவம்; இந்திய அணிக்கு 187 ரன் இலக்கு
-
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்