போலீஸ் செய்தி

முதியவர் நீரில் மூழ்கி பலி

சாத்துார்: சாத்துார் வீ.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 63. மதுபோதையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கோட்டை கண்மாயின் மீதுள்ள பாலத்தில் படுத்து உறங்கியவர் நிலைதடுமாறி கண்மாய் நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் பலி

சாத்துார்: சாத்துார் ஒ. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கலா,43. சர்க்கரை நோயாளி. குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர்.அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement