என்.ஆர்.காங்., அலுவலகத்தில் விடுதலை நாள் தின விழா
புதுச்சேரி: என்.ஆர்.காங்., சார்பில் விடுதலை தின விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தலைவர்களின் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.
இதில், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், பொருளாளர் வேல்முருகன், துணை தலைவர் பலராமன், செயலாளர் ஜவகர், வழக்கறிஞர் பக்தவச்சலம், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி, மாநில மகளிர் அணி தலைவி ரேவதி பற்குணன், மாவட்ட தலைவர்கள் ராஜகோபால், பாலமுருகன், பாஸ்கரன், அமைப்புகளின் அணி தலைவர்கள் செந்தாமரை கண்ணன், வீராசாமி, கனகராஜ், சிறுபான்மை அணி தலைவர் இக்பால் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சிஎம்எஸ்03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ ராக்கெட்
-
துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
-
மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்
-
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
-
ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்
-
உலகக்கோப்பை கிரிக்கெட் பைனல்; இந்திய மகளிர் அணி பேட்டிங்