சிறுத்தை தாக்கி ஆடு பலி

நெய்க்காரப்பட்டி: பழநி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதி அருகே ஆண்டிபட்டி, சின்னம்மாபட்டி கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

பழநி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதி அருகே ஆண்டிபட்டி, சின்னம்மாபட்டி கிராமங்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் வேலியில் சிக்கியது. அதனை வனத்துறையினர் மீட்டனர். இந்நிலையில் நேற்று சின்னம்மாபட்டியை சேர்ந்த நாகப்பன் 45, ஆட்டுக்குட்டி விலங்கு தாக்கி இறந்து கிடந்தது. சிறுத்தை தாக்கி கடித்து தின்றுவிட்டு மிச்சத்தை விட்டு சென்றிருக்கலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கொழுமம் வனச்சரகர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சிறுத்தை நடமாடத்தை கண்டறிய கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement