12 கிலோ குட்கா பறிமுதல்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே புத்துார் -இனாம் கோவில்பட்டி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வேகமாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பார்சலில் மறைத்து வைத்திருந்த 12 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது. டூவீலரை பறிமுதல் செய்து செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியை 55, போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement