தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தெருநாய்க்கடி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டில்லியில் தெருநாய்க்கடி சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரணை நடத்தியது.
எதிர்ப்பு இந்த வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இணைத்தது. டில்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, உடனடியாக காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை ஆகஸ்ட் 22ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தெருநாய்க்கடி பிரச்னையை சமாளிக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கக்கூடிய தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை மாநில அரசுகள் எந்த அளவிற்கு செய்து வருகின்றன என்பது உள்ளிட்ட விபரங்களை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா அமர்வில், கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கு வங்கம், தெலுங்கானா, டில்லி மாநகராட்சி தவிர மற்ற மாநில அரசுகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள் கோபமடைந்தனர்.
பின், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களும், 3ம் தேதியான நாளை, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தனர்.
இந்நிலையில், தெருநாய்க்கடி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்:
தமிழகத்தில் இதுவரை 4.77 லட்சம், 'ரேபிஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்ய, 450 கால்நடை டாக்டர்களுக்கு கால்நடை பல்கலைகள் மூலம், 15 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500 உதவி டாக்டர்களுக்கும், 500 உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. 25 மாநகராட்சிகளில், நாய்களுக்கான, 86 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் மட்டும் ஐந்து கருத்தடை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 10 மையங்களை கூடுதலாக உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
450 பேருக்கு பயிற்சி டவுன் பஞ்சாயத்துகளில், 96 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 450 பேருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தெருநாய்களுக்காக, 72 காப்பகங்கள் உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காக, 2022- - 23ம் நிதியாண்டு முதல், 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், 25 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -
நான் எனது சுற்றத்தார்களுக்கு எப்படி எதிரியாக செயல்பட முடியும் - இப்படிக்கு டாஸ்மாக்கினாட்டின் பிரபலங்கள் - அரசியல்வாதிகள் முதல் நடிக நடிகையர்கள் வரை
அடுத்து இப்படி எல்லாம் செய்திகள் ஒருவேளை வரலாம்.கருவுற்ற நாய்களுக்கு பால், உணவு வழங்க அரசு பல கோடி டெண்டர். நாய்களுக்கு கருத்தடை ஏற்படுத்த இரண்டாயிரம் டாக்டர்கள் புதிதாக நியமனம். நாய்கள் கருத்தடை டாக்டர்கள் நியமனத்தில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை . எதிர்கட்சி தலைவர் வீண் அவதூறு பரப்புகிறார் சட்டசபையில் அமைச்சர் ஆவேசம். ஊழலை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு.
அப்பாவின் வழிகாட்டுதலில், நாய்கள் காப்பக திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். தற்போதைய நிலை பெயரிடுவதில் சிறிய குழப்பம். மூன்று பெயர்கள் பரிசீலனத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. "பெரியார் நாய்கள் காப்பக திட்டம்", "கலைஞர் நாய்கள் காப்பக திட்டம்", "திராவிட நாய்கள் காப்பக திட்டம்". மத்திய அரசிடம் மானியம் கோரிக்கை வைக்கப்பட்டு நிதி வந்தவுடன் மாநிலம் முழுவதும் 72 காப்பகங்கள் அமைக்கப்படும்.
மனிதர்களே வசிக்க இருப்பிடமில்லாமால் சென்னையில் தெருக்களில் வசிக்கிறார்கள் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் நாய்களுக்கு காப்பிடம் அமைகிறார்கலாம் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க கொல்வதுதான் ஒரே வழி மற்றபடி பலகோடி சுருட்ட இந்த திட்டங்கள் உதவும்
Street dogs can not be seen in developed countries.
நாய்களுக்கு பிஸ்கட் வாங்கிய வழியில் சில பல கோடி செலவு ... ஒதுக்கியது...
மறைந்த நடிகர் என் எஸ் கிருஷ்ணன் படத்தில் சர்க்கஸ் கணக்கு எழுதுபவன் கரடிக்கு அல்வா கொடுத்த செலவு என்று எழுதுவான். அது போல.......
அட பாவத்தை என்னத்த சொல்றது.....
இங்கே இப்படி ....அங்க அப்படி...
Whats the target? Whats the time frame to achieve the target?
Seems to be just trying to satisfy the court...
தெரு நாய்களை ஆர்வமுள்ள சமுக ஆர்வலர்கள் தத்து எடுத்து கொள்ளட்டும். அரசும் சிறப்பு விதிகளின் கீழ் ரூ 1000 கோடி ஒதுக்கீடு செய்ய முயற்சி கொள்ள வேண்டும் . கட்சியினருக்கு டெண்டர் கிடைக்கும் கமிஷனும் கிடைக்கும்
இந்த காப்பகங்கள் மாவட்ட அறிவாலயம் இடத்தில் அமைக்கப்படும்மேலும்
-
சிக்னலில் நின்றிருந்த 3 பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
-
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்
-
ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது
-
'நாங்கள் போரில் பிஸியாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது' :புலம்புகிறார் பாக்., ராணுவ அமைச்சர்
-
கஞ்சா விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
-
'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது'