குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கிராமசபையில் புகார்

தேனி: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கொடுவிலார்பட்டியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற வேல்மணி கூறுகையில், 2களத்து தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. அதனை சீரமைக்க வேண்டும். வீரநாகு என்பவர் அண்ணாமலை நகரிலும் இதே நிலை உள்ளது. சில இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனை சீரமைக்க வேண்டும் என்றனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதாஹனீப் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரதவேல் முன்னிலை வகித்தார்.

Advertisement