போலீஸ் செய்திகள்....தேனி

கொலை மிரட்டல் ஒருவர் கைது

தேனி: அம்மச்சியாபுரம் நந்தகுமார் 24, ஆட்டோ டிரைவர். வீரபாண்டியில் இருந்து சுபாஷ்குமார் என்பவரை அழைத்து கொண்டு தேனி வந்தார். கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தை தாண்டிய போது நந்தகுமாருக்கும், சுபாஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுபாஷ்குமாரை ஆட்டோவில் இருந்து இறங்க கூறினார். ஏற்கனேவே அங்குநின்றிருந்த பழனிசெட்டிபட்டி சக்திவேல், சுபாஷ்குமார் இணைந்து ஆட்டோவை சேதப்படுத்தி, நந்தகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த நந்தகுமார் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் சக்திவேலை கைது செய்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் தற்கொலை

தேனி: பொம்மையகவுண்டபட்டி கிணற்றுதெரு குமரேசன் 60. இவரது மனைவி இறந்து சில ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் வீட்டில் குமரேசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகள் மோகனப்பிரியா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தகராறு ஒருவர் மீதுவழக்கு

தேனி: கரூர் அம்மன்நகர் ரமேஷ், இவருக்கும் இவரது சகோதரர் உத்தமபாளையம் சரவணன் என்பவருக்கும் சொத்து பிரச்னை உள்ளது. இந்நிலையில் கருப்பதேவன்பட்டி அருகே ரமேஷ் குடும்பத்துடன் காரில் சென்றார். காரை மறித்த சரவணன் இரும்பு கம்பியால் ரமேஷ், குடும்பத்தினரை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். ரமேஷ் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மகள் மாயம் : தாய் புகார்

கம்பம்: தெற்கு போலீஸ் ஸ்டேசன் அருகில் விறகு கடை தெருவில் வசிப்பவர் மணிகண்டன் 45, நாகஜோதி 38 தம்பதியினர். மணிகண்டன் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சிவசத்யா , சசி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவசத்யா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை பெரியகுளம் கல்லூரியில் நிகழ்ச்சி பங்கேற்க பள்ளியில் இருந்து செல்வதாக கூறி சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் நாகஜோதி கம்பம் தெற்கு போலீசில் புகாரில் போலீசார் விசாரிக் கின்றனர்.

Advertisement