இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா

தேனி: பெரியகுளம் கைலாசப்பட்டி திரவியம் கல்லுாரி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., மருத்துவ அணி அமைப்பாளர் பாண்டிய ராஜ் முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி மருத்துவமனையை திறந்து வைத்தார்.

தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பெரியகுளம் சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் முத்துராமலிங்கம், நேருபாண்டியன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் மூக்கையா, லட்சுமணன், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் ராஜேஸ், விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர், விவசாய அணி அமைப்பாளர் சுரேஸ்குமார், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், ஐயப்பன், பேரூராட்சி கிளை செயலாளர் தமிழன், கவியரசு, நகர செயலாளர் நாராயணபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராம்தாஸ் செய்திருந்தார்.

Advertisement