வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்

9


போபால்: ''பாகிஸ்தான் மீதான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்தார். இந்திய வரலாற்றில் இது முதன் முறை நடந்தது'' என ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் உபேந்திர திரிவேதி பேசியதாவது: எல்லையில் இருந்தாலும் சரி, பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும் சரி, சைபர் அச்சுறுத்தலாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு நமது ராணுவத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. நீங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கேள்விப்பட்ட படி, கராச்சி தாக்கப்பட்டது. எங்கள் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பலத்துடன் நாங்கள் போராடியதால் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றது.



பாகிஸ்தானில் எந்த அப்பாவி மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் மட்டுமே நாங்கள் குறிவைத்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு பணி. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி தான் பெயரிட்டார்.


இந்திய வரலாற்றில் முதல் முறையாக, முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, பிரதமர் மோடி ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் அமைதி ஆகிய மூன்று முக்கிய கொள்கைகள் ராணுவத்தினரை வழிநடத்தியது. இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசினார்.

Advertisement