ஜெயலலிதா இருந்திருந்தால் செங்கோட்டையனுக்கு எம்.எல்.ஏ., பதவி கூட கிடைத்திருக்காது: பழனிசாமி
சென்னை: ''ஜெயலலிதா இருந்திருந்தால், செங்கோட்டையனுக்கு எம்.எல்.ஏ., பதவியே கிடைத்திருக்காது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் அவர் அளித்த பேட்டி: கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கைகள், கட்சிக்கு எதிராகவே உள்ளன. அத்திக்கடவு - அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதற்காக, விவசாய அமைப்பினர் பாராட்டு விழா நடத்தினர்.
பங்கேற்கவில்லை
அது, கட்சி சார்பற்ற விழாவாக நடந்தது. அதில், நான் கலந்து கொண்டேன்; செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை' என்றார். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாத இலவச சைக்கிள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போதிருந்தே, 'பி டீம்' வேலையை செங்கோட்டையன் துவக்கி விட்டார்.
இணைப்பு பற்றி பேச வேண்டும் என்றார். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல; கட்சிக்கு துரோகம் செய்ததற்காக நீக்கப்பட்டவர்கள். நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என, பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு எடுக்கும் முடிவு இறுதியானது; அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். நீக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்பட்டதால், செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை; மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன்னை ஜெயலலிதா விசுவாசி என்கிறார். அப்படியெனில், அமைச்சர் பதவியிலிருந்து ஏன் செங்கோட்டையனை நீக்கினார்? நான் முதல்வரான பின்னரே, செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலர் பதவியும் கொடுத்தேன். ஜெயலலிதா இருந்திருந்தால், எம்.எல்.ஏ., பதவி கூட கொடுத்திருக்க மாட்டார்.
கடந்த 2012 டிசம்பர் 19ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஜெயலலிதா இறந்த பின், சசிகலாவால் துணை பொதுச்செயலரானார். கட்சியில் அவர் இணையாமலேயே, நேரடியாக பொறுப்பு கொடுத்தார் சசிகலா. இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் தான், தொண்டர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்துள்ளனர். இவர்களை போல் அவ்வப்போது பச்சோந்தி போல மாறுவது கிடையாது.
பேசியதில்லை
சட்டசபையில் தி.மு.க.,வை எதிர்த்து, செங்கோட்டையன் பேசியதே இல்லை. தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக இருப்பது நிரூபணமானது. இதை யாரும் மறைக்க முடியாது. இதனால், அவர் நீக்கப்பட்டவுடன், கோபிசெட்டிபாளையம் தொகுதி நகர, ஒன்றிய செயலர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகின்றனர்.
அவர், 53 ஆண்டு காலம் கட்சியில் இருக்கிறார் என்றால், மக்களுக்கு, கட்சியினருக்கு உழைத்திருக்க வேண்டும். மாறாக இயக்கத்துக்கு துரோகம் செய்தால், இந்த நிலைமை தான் ஏற்படும். இரண்டு கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்துக்கு எதிராக பேசுபவர்களை, சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
சிற்றரசர்
செங்கோட்டையனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தினகரன் சொல்கிறார். நீக்கப்பட்டவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார் செங்கோட்டையன். இப்படி தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால், வேடிக்கை பார்க்க முடியாது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததோடு, தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் என பன்னீர்செல்வம் பேட்டி கொடுக்கிறார்.
இவரை எப்படி கட்சியில் இணைக்க முடியும்? இவர்கள் எல்லாம் அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்காக இணைக்கச் சொல்லவில்லை. தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக திட்டமிடுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பி டீம் ஆக செயல்படுவது தான் இவர்களின் திட்டம். கோபிசெட்டிபாளையம் பகுதியில் செங்கோட்டையன் சிற்றரசர் போல நடந்து கொண்டிருந்தார்.
இன்று அப்பகுதி மக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது; சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால் தான் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
@block_P@
''கோடநாடு பற்றி பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அ.தி.மு.க., ஆட்சியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல; இரண்டு, மூன்று கொலைகள் நடந்தன என்கிறார். என்ன ஒரு வன்மத்தனம்! கட்சிக்குள் இவரை வைத்திருந்தால் எப்படியிருக்கும்! மனசுக்குள் ஒன்றை வைத்து, வெளியில் நாடகத்தனமாக நடந்து கொள்கிறார் என்பது, இதிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டது,'' என்றார் பழனிசாமி.block_P
அம்மா இருந்தா எல்லாமே ஓபிஎஸ் தான்! மற்றதெல்லாம் தஞ்சாவூர் பொம்மைகள்!
நம்பிக்கை துரோகிகளுக்கு பஞ்சம் இல்லாத கட்சி!
அப்படியே ஜெயலலிதா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்ன என்பதையும் யோசிச்சு சொல்லுங்க
பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்க பட்டபோது அவரை மீண்டும் அதிமுகாவில் சேர்க்க செங்கோட்டையன் அவர்களிடம் உதவி கேட்டதையும் சொல்லலாமே.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜக கூட்டணி வைத்ததற்காக ஈப்பீஸை ...
ஜெயலலிதா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் ஓப்பீஸ், ஈப்பீஸ், செங்கு மற்றும் கூட்டத்தில் பலர் ஜெ காரின் டயரில் ... இருக்க வாய்ப்புண்டு.
உண்மையில் இந்த செங்கோட்டையனால் தான் அரசியலில் அறிமுகம் ஆனார் எடப்பாடி .சசிகலாவால் முதல்வர் ஆனார் . தமிழ் நாட்டுக்கு சசிகலா எப்படியோ . ஆனால் எடப்பாடிக்கு மிக பெரிய உதவி செய்தவர். இல்லை என்றால் அவர் பகுதியை தவிர தமிழ் நாட்டில் யாருக்குமே தெரியாது. ஆனால் நன்றியை காட்ட வேண்டியவர் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி துரோகம் செய்தார். தற்போது செங்கோட்டையனை நீக்கி துரோகம் செய்தவர். இதே செங்கோட்டையன் தான் ஜெயலலிதா சட்டசபையில் தாக்க பட்டபோது அவரை காப்பாற்றியவர். அப்போது இந்த பழனிசாமி எங்கே ஓடி போனார்
தென் பாண்டி சி மையிலிருந்து அனுதாபியின் குரல் ..
பாரத ரத்னம் எம் ஜி ஆர் 72கட்சி துவங்கினார். 1977அருப்புக்கோட்டை தொகுதியில் முதன் முதலாக இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டார் . தலைவருக்காக தொகுதியில் வேலை பார்த்தேன் வாக்குகள் எண்ணப்பட்ட அன்று தேவாங்கர் உயர்நிலை பள்ளி அருப்புக்கோட்டையில் நடைபெற்றதிலும் பங்குகொண்டேன் தலைவரின் வெற்றி அறிவிப்பை அன்றைய பஞ்சவர்ணம் பெற்றுகொன்டார். பின்னர் சென்னை சென்று சமப்பிக்கப்பட்டது .அதன்பின்னர் மத்திய அரசில் வேலை பெற்று இந்தியாவின் பல இடங்களில் பனி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. பின்னர் 1985தேர்தலில் தலைவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ்ல் தலைவரை நேரில் சந்தித்தேன் .ஆயினும் கட்சில நுழையவில்லை மெம்பரும் ஆகவில்லை .ஆயினும் கட்சியின் அனுதாபியாக இருந்தேன் .
தலைவரின் திடீர் மறைவு 1987டெஸெம் பரில் என்னை போன்றோரை துக்கத்தில் ஆழ்த்தியது பின்னர் டெல்லி சென்றேன் கட்சியில் திடீர் மாற்றங்கள் பல நடந்தன. ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் வந்தார். இதை இருந்து பாரத ரத்தின எம் ஜி ஆரின் காலத்து ஆட்கள் பழிவாங்கப்பட்டனர்.
கே ஏ கே கிருஷ்ணசாமி, எஸ் டி சோமசுந்தரம் ஹா ண்டே , ஆர் எம் வீரப்பன் நெடுஞ்செழியன் காளிமுத்து மதுரை முத்து ...அடுக்கிக்கொண்டே போகலாம்
ஆனால் 72கலீல் கட்சியை வளர்ப்பதில் எவ்வளவு சிரமங்கள் இருந்தன இருந்தது பற்றி யோசிக்கய்யாலுமா ....கட்சி கூட்டத்திற்கு தனது கைக்காசை போட்டுத்தான் சிலவழிக்கவேண்டும் என தலைவர் ஆணித்தரமாக சொல்லுவார் .
மதுரையில் அவனியாபுரம் காளிமுத்து தனது வீடு முதல் அனைத்து சொத்துக்களையும் சிலவழித்துள்ளார் . இவர் சாதாரண வாத்தியார். தலைவரின் கட்சி திருமதி ஜானகி அம்மையார் அவரின் தியாகம் ஜெயலலிதாவிற்கு சாதமாக மாறியது
இந்த கட்சியில் மிக மிக சீனியர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். வருத்தம் தான். அவர் செய்த கட்சி பணிகளை எவராவது நினைத்தது உண்டா ?????????
நீங்கள் தான் திமுக கட்சியின் B டீமாக வேலை செய்கிறீர்கள். அதனால் தான் 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ...திமுக ஆட்சியை எதிர்த்து எந்தவொரு போராட்டத்தையும் செய்ததில்லை ......அதற்கு கைமாறாக தான் திமுக ஆட்சி கொடநாடு கொலை கொள்ளை வழக்கை கிடப்பில் போட்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள் ....அது உண்மையா ???
முற்றிலும் உண்மைமேலும்
-
இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்; தினமலர் இணையதளத்தில் லைவ் பாருங்க!
-
மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
-
திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்; வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை
-
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் புதிய அம்சங்கள்; நாளை மறுதினம் துவக்கம்; வீடு தேடி அதிகாரிகள் வருவர்