அக்டோபர் மாதம் கார் விற்பனை அமோகம்; 5 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, கடந்த மாதம் கார் விற்பனை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து வகை பிராண்டு கார்கள் விற்பனையும் அமோகமாக நடந்து உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, தீபாவளி, சாத் பண்டிகை என வந்த வண்ணம் இருந்தது.
இந்த சூழலில், பண்டிகை கால தேவை அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, கடந்த மாதம் கார் விற்பனை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. மாருதி சுசூகி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா, கியா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் விற்பனை அபார வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கார் விற்பனை ஐந்து லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியது.
மாருதி சுசூகியின் கார் விற்பனை கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் 20 சதவீதம் அதிகரித்து 2.42 லட்சமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் துவங்கிய 40 நாள் பண்டிகை காலத்தில், ஐந்து லட்சம் கார் புக்கிங் செய்யப்பட்டதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனையில் மாருதி 20% வளர்ச்சியைக் கண்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேவை இன்னும் அதிகரிக்கும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. இது குறித்து வாகன உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்புகளும், பண்டிகை கால தேவை காரணமாக, நாங்கள் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
சந்தையில் தேவையையும் அதிக நுகர்வோர் ஆர்வத்தையும் கண்டோம். இந்த வேகத்தை விரைவுபடுத்த எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தைப் பார்க்கும்போது, தொழில்கள் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்.
உலகளாவிய மின்னணு பாகங்கள் விநியோக இடையூறுகள் இன்னும் பெரிய அளவில் உள்ளன. இது எங்களுக்கு இதுவரை இல்லாத சிறந்த அக்டோபர் மாதமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
@block_Y@
மாருதி நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, ''எங்களிடம் போதிய அளவில் கார்கள் இருப்பில் இல்லை. இருப்பு நிறைய இருந்தால் இன்னும் கூடுதலான கார்களை விற்பனை செய்திருப்போம்,'' என்றார். டாடா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 75 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 15 சதவீத வளர்ச்சி என்று அந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் அதிகாரி தருண் கார்க், அக்டோபர் மாதம் முழுவதுமே நல்ல விற்பனை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.block_Y
அதிகரிக்கும் கார் விற்பனை பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் பாய்வதையே காட்டுகிறது. ஜிஎஸ்டி இன்னும் 12 மாதங்களில் 2.5 லட்சம் கோடி என்று இருக்க வாய்ப்பு இருக்கிறது.
கிஸ்தி குறைந்ததால் நிறைய லாபம். நான் போன மாதம் நாலு கார் வாங்கினேன். இந்த மாதம் 6 கார் வாங்குவேன். இனிமேல் ஒவ்வொரு மாதமும் நிறைய கார் வாங்குவேன். மோடிக்கு நன்றி
GST வரி காருக்கு குறைந்ததுன்னு, செய்தி வந்தப்போ , இதனால் யாருக்கு லாபம்னு சொன்னவங்க இந்த கார் வாங்கிய ஐந்து லட்சம் பேர்ல இல்லைன்னு நம்புறேன்.
ரோடு?
டிராபிக் ஜாம் னா ரோடு பெரிதாக அல்லது நிறைய ரோடு போட வேண்டும். அதுதான் அரசின் வேலை கார் வாங்குதல் மக்களின் உரிமை சார்ந்தது.
அதிக கார் விற்பனை என்றால் அதிக டிராபிக் ஜாம். என்ஜாய். கார் விற்பனை செய்பவர்கள் அதை வீட்டுக்கே எதிரே போக்குவரத்துக்கும், மனித நடமாட்டத்துக்கும் இடைஞ்சல் இல்லாமல், கார் வாங்குபவர்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளேயே இடவசதி இருக்கிறதா என்று அறிந்து விற்கவேண்டும். இல்லையென்றால் நோ கார் என்று கூறவேண்டும். போக்குவரத்து சட்டத்திலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையில் அந்த விதிமுறையை முறையாக யாரும் பயன்படுத்துவதில்லை.