வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்

17


குவஹாத்தி: வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேரை அசாம் மாநில போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.


வங்கதேசத்தில் இருந்து இந்தியர்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதைத் தடுக்க மாநிலப் படையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அசாம் போலீசார் கூறியிருந்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருகின்றனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய தீவிர சோதனையில், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.



இது குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் 16 பேர் அசாமில் வசித்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு அசாமில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள், என்றார்.

Advertisement