அர்ஜுன், பிரக்ஞானந்தா 'டிரா' * உலக கோப்பை செஸ் தொடரில்...
கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் நான்காவது சுற்றின் முதல் போட்டியை அர்ஜுன், பிரக்ஞானந்தா 'டிரா' செய்தனர்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரனவ், கார்த்திக் வெங்கடராமன் என 5 வீரர்கள் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
நேற்று துவங்கிய நான்காவது சுற்றில் முதல் போட்டிகள் நடந்தன. அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோவை சந்தித்தார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் இருவரும் 'டிரா' செய்ய சம்மதித்தனர். ஸ்கோர் 0.5-0.5 என சமனில் உள்ளது.
பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோவை எதிர்கொண்டார். துவக்கத்தில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, 41 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
பிரனவ்-உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், ஹரி கிருஷ்ணா-சுவீடனின் கிரான்டெலியஸ், கார்த்திக் வெங்கடராமன்-சீனாவின் லியம் லீ மோதிய நான்காவது சுற்றின் முதல் போட்டிகள் 'டிரா' ஆகின.
மேலும்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்