கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உள்ள நெடுமானுர், சோழம்பட்டு, பொய்குனம், காட்டு கொட்டாய், செட்டியந்துார் ஆகிய ஊர்களில் விவசாயிகள் அதிக அளவில் கீரை சாகுபடி செய்துள்ளனர்.

அரை கீரை, வெந்தய கீரை, பொதினா, கொத்துமல்லி, பாளக்கீரை, துாதுவளை, மனத்தக்காளி போன்ற கிரை வகைகளை சாகுபடி செய்கின்றனர். வளர்ந்த கீரைகளை அறுவடை செய்து சங்கராபுரம் உழவர் சந்தை மற்றும் கடை வீதியில் விற்பனை செய்கின்றனர். ஒரு கட்டு கீரை 15 ருபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் சங்கராபுரம் பகுதியில் விவசாயிகள் கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement