வாக்காளர் திருத்த பணி கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கொண்டு வந்து பா.ஜ., அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் கமிஷனை வன்மையாக கண்டிக்கிறோம். சங்கிகளின் அடிமையாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மாறிவிட்டார். வரும் 2026 தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதியிலும், தமிழகத்தில் 200 தொகுதிகளிலும் தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மலையரசன் எம்.பி.,மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.,, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்., ஜெய்கணேஷ், வி.சி., மதியழகன், ம.தி.மு.க., ஜெய்சங்கர், இந்திய கம்யூ.,ராமசாமி, மா.கம்யூ.,ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
மேலும்
-
ஆப்பரேஷன் சிந்தூர் 2.0க்கும் தயார்; ராணுவ ஜெனரல் உபேந்திரா திவேதி
-
பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு: காலசக்கர அபிஷேக விழாவில் பங்கேற்ற மோடி பெருமிதம்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை