மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்

1

பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா?'' என, அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதால், தேசிய அளவில் பிரபலமடையலாம் என்று கருதி செயல்பட்டு வருகிறார். இதற்கு அந்த அமைப்பினரும் சரியான நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து பிரியங்க் கார்கே கூறியதாவது:

நம் நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு சரியான கணக்கு பராமரிக்கப்படுகிறது. கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கப்படும் பணத்துக்கு கூட கணக்கு உண்டு.

அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு கணக்குகள் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா?

அந்த அமைப்பு இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. முறைப்படி பதிவு செய்தால், வருமானம் கணக்கிடப்படும். வரி கட்ட வேண்டி இருக்கும். இதனால், அவர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். அதுபோல அந்த அமைப்பில் உள்ளவர்கள் அறிவுடன் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement