'குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது'
திம்பு: “டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் சதி பற்றி புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும்; அதன் பின்னால் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நம் அண்டை நாடான பூடான் சென்ற பிரதமர் மோடி, திம்பு நகரில் நடந்த அந்நாட்டின் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின், 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நான் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். டில்லியில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். இந்த கோர தாக்குதல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன்.
ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் துணை நிற்கிறது. இந்த சதியின் காரணத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும்.
அதன் பின்னால் உள்ளவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையைப் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@ *ஸ்வராஜ்யா லோகோ வைக்கவும்* நிர்கதியான குடும்பங்கள்!! டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பஸ் கண்டக்டர், மருந்து கடை உரிமையாளர் என, 13 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. டில்லி செங்கோட்டை அருகே நடந்த கோர சம்பவத்தில் இறந்தவர்களில் உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த அசோக் குமாரும் ஒருவர். டில்லி ஜகத்பூரில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இது தவிர சொந்த ஊரில் வசிக்கும் அவரது தாய் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரரையும் இவரே கவனித்து வந்தார். இதையடுத்து அசோக் குமார், காலையில் பஸ் கண்டக்டராகவும், இரவில் காவலாளியாகவும் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், தன் நண்பர் லோகேஷ் குமார் குப்தா என்பவரை காண, சாந்தினி சவுக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது, இக்கோர சம்பவத்தில் சிக்கி அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அசோக் குமாரின் நண்பர் லோகேஷ் குமார் குப்தாவும் இச்சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல், டில்லி ஸ்ரீனிவாசபுரியைச் சேர்ந்த அமர் கட்டாரியா என்பவர் பாகிரத பேலஸ் அருகே மருந்து கடை நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பும்போது செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.block_B
@block_B@ 11 மணி நேர பயணம் 30 நிமிடங்களில் தாக்குதல் டில்லி குண்டுவெடிப்பு காரணமாக கூறப்படும், 'ஹூண்டாய் ஐ - 20' கார், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இருந்து டில்லிக்கு வந்ததை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த கார், பயணித்த விபரங்கள்: நேற்று முன்தினம் காலை 7:30 மணி: ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள ஏசியன் மருத்துவமனையில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. காலை 8:13 மணி: தலைநகர் டில்லிக்கு நுழைவுவாயிலாக கருதப்படும் பதர்பூர் சுங்கச்சாவடி அருகே தென்பட்டது. காலை 8:20 மணி: டில்லி ஓக்லா தொழிற்பேட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கை கடந்து சென்றது. மாலை 3:19 மணி: டில்லி செங்கோட்டை வளாகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்தது. அதே இடத்தில் மூன்று மணி நேரம் வரை நிறுத்தப்பட்டிருந்தது. மாலை 6:22 மணி: வாகன நிறுத்துமிடத்தில் இருந்து டில்லி செங்கோட்டை நோக்கி புறப்பட்டது. இங்கிருந்து அந்த காரை இயக்கியது யார், என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாலை 6:52 மணி: செங்கோட்டை அருகே சென்றபோது அந்த கார் வெடித்து சிதறியது. மற்றொரு கண்காணிப்பு கேமராவில், இதே கார், பெட்ரோல் பங்க் வெளியே நிறுத்தப்பட்டதுடன் அங்குள்ள வாகனத்திற்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த வாகனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.block_B
அதே வசனம்! பத்து வருடங்களுக்கு முந்தியது! அலுத்து விட்டது!மேலும்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
-
6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு