மின் கம்பங்களை மாற்ற அ.தி.மு.க., மனு 

அரியாங்குப்பம்: சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற கோரி, அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் மின்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.

அரியாங்குப்பம் மின்துறை இளநிலைப் பொறியாளர் லுார்துராஜிடம் கொடுத்துள்ள மனு:

அரியாங்குப்பம் பகுதியில் சாலை நடுவே மின் கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் செரித்து சேதமடைந்து இருப்பதால், உடனடியாக மாற்ற வேண்டும். மழைக்காலம் வருவதால், மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகளை உடனடியாக, அகற்ற வேண்டும்.

மின் கம்பிகளை அகற்றி, புதைவட மின் கேபிள்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மின் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement