தேர்தலில் தினகரனுக்கு முடிவுரை: உதயகுமார்

மதுரை: 'ஜெயலலிதாவுக்கு தினகரன் செய்த துரோகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். வரும் தேர்தலில் அவருக்கு முடிவுரை எழுதப்படும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

தினகரன் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தினமும் பத்திரிகையாளரை சந்திக்கிறார். இதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா என மக்கள் யோசிக்கின்றனர். அ.தி.மு.க., கூட்டணி பற்றி ஏன் தினகரன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஜனவரியில்தான் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். ஆனால் அ.தி.மு.க., கூட்டணி பற்றி 'அரைவேக்காட்டு' தினகரன் அவசர அவசரமாக ஏதேதோ பேசி திருப்தி அடைகிறார். சம்மன் இல்லாமல் ஆஜராகிறார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் பற்றிய ரகசிய பேப்பரை கிழித்து போட்டேன் என்று பச்சை பொய்யை திரும்பத் திரும்ப சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை. ஜெயலலிதாவின் பதவிக்கு ஆசைப்பட்டு அவருக்கு துரோகம் செய்தீர்கள். இதை மக்கள் ஒருபோது ஏற்கப்போவதில்லை. 2026 தேர்தலோடு அவரது அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல் காத்திருக்கிறார். கடலும் வற்றாது, தினகரனால் கருவாடும் தின்ன முடியாது.

இவ்வாறு கூறினார்.

Advertisement