10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
திருச்சூர்: கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட புத்தூர் விலங்கியல் பூங்காவில் 10 மான்களை தெருநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
336 ஏக்கர் பரப்பளவு கொண்ட புத்தூர் விலங்கியல் பூங்கா திருச்சூரில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவை கடந்த அக்.,28ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். ஆசியாவின் 2வது மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகவும், இந்தியாவின் முதல் டிசைனர் பூங்காவாகவும் இது திகழ்ந்து வருகிறது. இங்கு 80 இனங்களைச் சேர்ந்த 534 விலங்குகள் உள்ளன.
தற்போது இந்தப் பூங்காவில் முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பார்வையிட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புத்தூர் விலங்கியல் பூங்காவில் 10 மான்களை தெருநாய்கள் கடித்துக் கொன்றுள்ளன. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பூங்காவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அரங்கேறியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தப் பூங்காவை திறந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அங்குள்ள விலங்குகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழச் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க மறுத்த பூங்கா அதிகாரிகள், மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
நாய்களும் விலங்குதான். மான்களும் விலங்குகள்தான். இப்பொழுது அந்த peta அமைப்பினர் மான்களுக்காக கண்ணீர்விடுவார்களா? அல்லது எப்பொழுதும்போல தெருநாய்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா?
நாய்கள் வேட்டை விலங்குகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்
முதல்வர் வந்து சென்றுள்ளார் அவரோடு அவரது மருமகனும் வந்துள்ளான் என்று பார்த்தேன் . இப்போ பாவம் மான்கள்மேலும்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு