அல் பலாஹ் மருத்துவ கல்லூரி டாக்டர் மாயம்: பயங்கரவாத தொடர்பால் பணி நீக்கம் செய்யப்பட்டது அம்பலம்
பரிதாபாத்: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அல் பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய மற்றொரு டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே வெடிமருந்து விவகாரத்தில் 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு டாக்டரின் பெயரும் வெளியாகியுள்ளது. இவர் காஷ்மீரில் பயங்கரவாத தொடர்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நிசார் உல் ஹசன் என்ற அந்த டாக்டர், பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவ கல்லூரியில் தங்கி பணியாற்றியதுடன் அங்கேயே படித்து வந்தார். டில்லியில் கார் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த அல் பலாஹ் தொண்டு நிறுவனம், கல்லூரி வளாகத்தில் தான் அவர் உள்ளார். அவரிடம் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தியதாக தெரிவித்தது. இருப்பினும், நிசார் உல் ஹசன் கல்லூரி வளாகத்தில் இல்லை எனவும், அவரை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யார் இவர்
காஷ்மீரின் பாரமுல்லாவின் சோபோர் பகுதியைச் சேர்ந்த நிசார் உல் ஹசன், காஷ்மீர் டாக்டர் சங்கத் தலைவராக இருந்தார். பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். ஸ்ரீநகரில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், பயங்கரவாத தொடர்பு காரணமாக 2023ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்து கவர்னர் உத்தரவிட்டார். இதன் பிறகே அவர் ஹரியானாவில் உள்ள அல்பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய வெடிமருந்து விவகாரத்தில் இவருக்கு பங்கு இருக்கும் என உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மகளிடம் விசாரணை
நிசார் உல் ஹசன் தலைமறைவானதைத் தொடர்ந்து அவரது மகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகளை காயமடையுந்தவர்களுக்கு நர்சிங் பணியில் அமர்த்த வேண்டும்
அது அதுக்கு மேல தீவிரவாதியா வளர்த்து இருந்தா?மேலும்
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ- ஜெய்சங்கர் சந்திப்பு; முக்கிய ஆலோசனை
-
மியான்மர் சைபர் மோசடி மையங்களுக்கு ஆள் கடத்தல்: மோசடி முகவர்கள் இருவரை கைது செய்தது சிபிஐ
-
டில்லியில் 6 மாவட்டங்களில் 12 இடங்களை நோட்டமிட்ட பயங்கரவாதி உமர்; தோண்டத் தோண்ட வெளிவரும் தகவல்கள்
-
கூட்டணி கட்சிகளின் நலனுக்காக மட்டும் செயல்படும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக அரசு நாடகம்: சீமான் குற்றச்சாட்டு
-
பீஹாரில் தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: மற்றொரு கருத்துக்கணிப்பில் தகவல்