அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ- ஜெய்சங்கர் சந்திப்பு; முக்கிய ஆலோசனை

2

ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோவில் நடந்த ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்தார்.


ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.


அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்தார். வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆலோசித்தனர்.


இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டில்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு மார்கோ ரூபியோ
இரங்கல் தெரிவித்தார்.


வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி நமது இருதரப்பு உறவுகளைப் பற்றி விவாதித்தோம். உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு, மேற்கு ஆசிய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Advertisement