பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: குவிகிறது பாராட்டு
புதுடில்லி: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தை துவக்கிய விசாரணை தான், வெடிமருந்து பறிமுதல் செய்து பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த விசாரணைக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானதாக இருந்தது. இருப்பினும், இந்த முறை இந்த விவகாரத்தை 2014ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொன்ற ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்கு தலைமை ஏற்ற இவர், போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.
இதில் போஸ்டரை ஒட்டிய 3 பேர் சிக்க அவர்கள் அளித்த வாக்குமூலம் தான் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணியை அம்பலப்படுத்தியது. விசாரணை டில்லி, ஹரியானா, உ.பி., வரை நீண்டு 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் பின்னணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய வைத்தது.
யார் இவர்
சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராம கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மாவும் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சந்தீப் சக்கரவர்த்தி கர்னூல் மாவட்டத்தில் உள்ள மான்டசரி பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பிறகு 2010 ல் கர்னூல் மருத்துவ கல்லூரியில் டாக்டர் பெற்றார். 2010 - 2011 வரை பயிற்சி மருத்துவராக இருந்தார். பிறகு 2014 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
காஷ்மீரில் பணி
காஷ்மீரில் சந்தீப் சக்கரவர்த்தி கேந்திர முக்கியம் வாய்ந்த இடங்களிலும், முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி உள்ளார்.
உரி மற்றும் சோபோரில் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த இடங்களில் பணியாற்றியுள்ளார்
பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பாரமுல்லாவில் நடவடிக்கை குழு எஸ்பி ஆகவும்
பாதுகாப்பு சவால்கள் நிறைந்த ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றி உள்ள இவர், கடந்த ஏப்.,21 முதல் ஸ்ரீநகர் மூத்த எஸ்பி(SSP) ஆகவும் பணியாற்றி வருகிறார்.
ஆனந்த்நாக், குப்வாரா, குல்காமில் பதவி வகித்த போது பல முக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடித்தார். போலீஸ் மற்றும் அப்பாவி மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார்.
' ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' என்ற பெயர் சந்தீப் சக்கரவர்த்திக்கு உண்டு. திட்டமிடுதல், உடனடியாக, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது இவரது பாணி. இதற்கு உதாரணம் தான் போஸ்டர் விவகாரம் என்கின்றனர் போலீசார். சிறிய அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம் விசாரணைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் சதி, வெடிமருந்து பறிமுதல் வரை சென்றுள்ளது.
விருதுகள்
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக வீரதீர செயல்களுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை ஆறு முறையும்
ஜம்மு காஷ்மீரில் போலீசின் பதக்கம் நான்கு முறையும்
இந்திய ராணுவத்தின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
பாராட்டுக்கள்......
வாழ்த்துக்கள்
திர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவிட மாடலு ஆச்சிக்கி ஒரு ஆறு மாசம் போஸ்டிங் போடுங்கண்ணா இந்த மாமன்னரை ஒழுங்கு படுத்தி அனுப்பறோம் இப்பிடி எல்லாப் போலீசும் இருந்துச்சுன்னா நாங்க எப்பிடி நிம்மதியா வருமானத்த - - வந்து - - - ஆச்சியக் கவனிக்கது? இது சரிப்படாது எங்கியாச்சும் இவரத் தூக்கி இங்க போட்டுடப் போராய்ங்க
இவரை, நம் தமிழக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது ஆம்ம்மாம் சொல்லிவிட்டேன்
பாராட்டுக்கள்
sallute sir