மானவ் 'நம்பர்-35': டேபிள் டென்னிஸ் தரவரிசையில்
புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் மானவ் தாக்கர் முதன்முறையாக 35வது இடத்தை கைப்பற்றினார்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.டி.எப்.,) வெளியிட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர், 38வது இடத்தில் இருந்து முதன்முறையாக 35வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் உலக தரவரிசையில் 'டாப்-35' பட்டியலில் இடம் பிடித்த 3வது இந்திய வீரர், 5வது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
ஏற்கனவே இந்தியா சார்பில் அஜந்தா சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஸ்ரீஜா அகுலா, மணிகா பத்ரா இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.
குஜராத்தை சேர்ந்த மானவ் 25, சமீபத்தில் சென்னையில் நடந்த டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் தொடரில் தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை வீழ்த்தினார்.
இதுகுறித்து மானவ் கூறுகையில், ''ஜூனியர் (18, 21 வயது) தரவரிசையில் முதலிடம் பிடித்தது, சீனியர் பிரிவு போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமைந்தது. கடந்த 2021ல் வெளியான சீனியர் தரவரிசையில் முதன்முறையாக 150வது இடம் பிடித்தேன். இந்த ஆண்டு துவக்கத்தில் 60வது இடத்தில் இருந்தேன். தற்போது 35வது இடம் பெற்றது மகிழ்ச்சி. இந்தியாவுக்காக தொடர்ச்சியாக விளையாடுவது, பாரிஸ் ஒலிம்பிக்கில் கிடைத்த அனுபவம் என்னை சிறந்த வீரராக மாற்றியது,'' என்றார்.
மேலும்
-
கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் நீக்கம்
-
லேப் டெக்னீஷியன்களுக்கு நடந்தது ஆய்வுக்கூட்டம்
-
பள்ளி செல்லாத குழந்தைகள் 1,472 பேர்:மீண்டும் சேர்க்க நடவடிக்கை
-
கலப்பட தேயிலை விற்ற வியாபாரிக்கு சிறை
-
மூவரை கத்தியால் தாக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த பெற்றோர்
-
விபத்தில் சிக்கிய காவலாளி அலட்சியத்தால் உயிரிழப்பு