ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா

சிட்னி: சிட்னி ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிக்கு ராதிகா முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன், தாய்லாந்தின் அனன்டனாவை எதிர் கொண்டார்.

இதில் ராதிகா 3-0 (11-7, 11-3, 11-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

* ஷாங்காய் நகரில் நடந்த சீன ஓபன் ஸ்குவாஷ் தொடர், பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, எகிப்தின் சனா இப்ராஹிமை சந்தித்தார்.
முதல் செட்டை 11-5 என வென்ற அனாஹத், அடுத்த செட்டை 6-11 என இழந்தார். தொடர்ந்து 3, 4வது செட்டையும் (4-11,7-11) கோட்டை விட்டார். முடிவில் அனாஹத், 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement