பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா' * உலக கோப்பை செஸ் தொடரில்...

கோவா: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், ஹரிகிருஷ்ணா மோதிய போட்டி 'டிரா' ஆகின.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, கார்த்திக் வெங்கடராமன் என 5 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்கின்றனர். இதன் இரண்டாவது போட்டி நேற்று நடந்தன.
அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதிய போட்டி 36 நகர்த்தலில் 'டிரா' ஆனது (ஸ்கோர் 1.0-1.0). பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோ மோதிய மற்றொரு போட்டி, 30 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது (ஸ்கோர் 1.0-1.0). ஹரி கிருஷ்ணா-சுவீடனின் கிரான்டெலியஸ் இடையிலான போட்டியும் 'டிரா ஆனது.
இன்று 'டை பிரேக்கர்' சுற்று நடக்கிறது. இதில் அசத்தினால் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறலாம். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனவ், 0.5-1.5 என உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்து, வெளியேறினார். கார்த்திக் வெங்கடராமன்-சீனாவின் லியம் லீயிடம் (0.5-1.5) வீழ்ந்தார்.

Advertisement