ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'

தென்காசி: தென்காசி அருகே புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் சந்தோஷ், 36. இவர், 2016ல் பாவூர்சத்திரம் -சுரண்டை சாலையில், மனைவி அனுஷாவுடன் வசித்தார். பக்கத்து வீட்டில் வசித்த பொன்செல்வி, 36, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

பொன்செல்வி கணவர் முருகன் அபுதாபியில் பணியாற்றியதால், பொன் செல்வி, சந்தோஷ் நெருக்கம் அதிகரித்தது. 2016 பிப்ரவரியில் முருகன் சொந்த ஊர் வருவதாக இருந்தது.

அப்போது சந்தோஷ் உடனான நெருக்கம் தெரிந்துவிடும் என்பதால், 2016 பிப்., 6ல் சந்தோஷை வீட்டிற்கு அழைத்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பின்னர், தன் தம்பி முருகன், 34, தந்தை தங்கபாண்டி, 70, ஆகியோர் உதவியுடன் அவரது உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தார்.

மூ வரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement