மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பாக தமிழக அரசிடம் கருத்துக் கேட்க வேண்டும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூ.9000 கோடியிலான இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கர்நாடகா அரசும் மாறி மாறி வழக்குகளை போட்டுள்ளன. மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி கர்நாடகா அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் கர்நாடகா அரசுகள் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
தமிழக அரசு வாதம்; கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால், 80 டிஎம்சி தண்ணீர் தடைபடும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை.
உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கூட காவிரியில்ர தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு இருந்துள்ளது. 50 வருடங்களாக காவிரி தண்ணீருக்காக கர்நாடகாவுடன் போராடி வருகிறோம். அணை கட்டப்பட்டால் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது, இவ்வாறு வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னைகள் எந்த ஒரு காலத்திலும் முடிவடையப் போவதில்லை. மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பு தமிழக அரசின் அனுமதியை கட்டாயம் கேட்க வேண்டும். அதேபோல, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும், என்றனர்.
மேலும், மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன்மூலம், மேகதாது அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டன.
Supreme court and as well Cauvery Management Board blindly refuse to construct the Megdoot dam based on the input submitted by Tamilnadu. Cauvery is flowing in Tamilnadu more than the distance covered by Karnataka but Tamilnadu or any States of Kerala or Puduchery have failed to construct the check dams to impound the precious water. Let the Supreme Court and Cauvery Management Board directs the Tamilnadu Govt to produce the details of the precious water flow in the Ocean. Merely making foul cry against Karnataka is only serve for political purpose and this is causing the public on both the States as and when the clash erupts between the States. When the Nature gives bountiful rain, the Govts failed to utilise the water in a proper way.
மேகதாது அணையை கர்நாடகா கட்டுவதற்கு தமிழகத்தில் பெரிய அளவில் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆளும் கட்சியிலிருந்தோ, காங்கிரஸ், கம்முனிஸ்ட் கட்சியிலிருந்தோ, மற்ற அல்லக்கை கூட்டணி கட்சியிலிருந்தோ, விவசாய பெரு மக்களிடமிருந்தோ பெரிய போராட்டம், ஆட்சேபனைகள் என்று எதுவும் தெரிவிக்கவில்லை. ஆக ஏதோ ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஆகவே, தமிழக அரசு சார்பில் மேகதாது அணையைக் கட்ட ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்து விடலாம். கர்நாடகா தாராளமாக கட்டிக் கொள்ளலாம்.
மாநில உரிமைகளை தங்கள் சுயலாபத்துக்காக அடகு வைத்த கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.... ஆஹா ... ஆணையம் பிற்பிக்கும் உத்திரவுகள் அனைத்தும் 100 சதவீதம் பின்பற்றப்படும் யுவர் ஆனர் .. ஏற்கனவே நைசாக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தோம்.... காவிரி படுக்கையில் மீத்தேன் எடுக்க நாங்களே நைசாக ஒப்பந்தம் போட்டோம். பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் நாங்களே அவற்றை மீண்டும் கேட்போம்... இதுதான் எங்கள் பண்பாடு.... வழக்கம்...
காவிரி இறுதித் தீர்ப்புபடி தமிழகத்துக்கு 177.5 டிஎம்சி நீர் கொடுத்தாக வேண்டும். எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது.அதற்கு மிஞ்சிய நீரைத் தேக்கி வைக்கவும் பயன்படுத்தவும் கர்நாடக அரசுக்கு உரிமையுள்ளது. நமது மாநிலத்தில் அணைகட்ட வழியில்லாத நிலையில் அங்கு கட்டுவதையும் எதிர்ப்பது நியாயமில்லை. சக திராவிட மாநிலத்தையே நம்ப மாட்டேன் என்பது ஈவேரா காட்டிய வழியா?
மழைக்காலங்களில் அபரிவிதமான காவேரி ஆற்று நீர் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. இதற்கு மறுப்பு ஏதும் இருக்க முடியாது. நீர் விரயத்தை தவிர்க்க முடியாதென்றாலும், குறைக்கலாமல்லவா? இதற்குத்தான் இந்த புதுப்புது அணைகள் கட்டும் திட்டம். காவிரி நீரை சேகரிக்க வேண்டுமென்றால், ஒன்று தமிழகம் அணை கட்ட வேண்டும், இல்லையேல் கர்நாடகம் அணை கட்டவேண்டும். தமிழகத்தில் காவிரி பாயும் பொழுது, ஒகேனக்கல் நீங்கலாக, பெரும்பாலும் சமவெளி பரப்பிலேயே செல்கின்றது. எனவே தமிழக மாகாண பரப்பிற்குள் புது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அவ்வளவாக இல்லையென்றே அறிய முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாகாண பரப்பிற்குள், அணை கட்டுவதற்கான பூகோள ரீதியான அமைப்புகள் சாத்தியமாக இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, கர்நாடக மாகாண பரப்பிற்குள் அணை கட்டுவதே சாலச்சிறந்தது. இதனால் பலனடையப்போவது இரு மாகாணங்களும் தான். சொல்லப்போனால் பூகம்பம் போன்ற ஆபத்து கர்நாடக மாகாணத்திற்க்கே அதிகம். அதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயமும் கர்நாடகத்திற்கே.
எனவே, பேராபத்தின்றி, செலவின்றி. இத்திட்டத்தால் பெரும்பயன் அடையப்போவது தமிழகமே. எனவே தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்க கூடாது.மேலும்
-
மேகதாது விவகாரத்தில் திமுகவின் செயல் மன்னிக்க முடியாது: ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன் விளக்கம்
-
“நரம்புகளின் நிழலில் எழுதப்பட்ட ஒரு நடன கவிதை”
-
பல இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை விசாரணையில் அம்பலம்
-
அடுக்குமாடி வீடு கட்டி தருவதில் ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் எம்.டி கைது
-
நிறைய நேரம் இருக்கிறது; இன்னும் பல தொழில்கள் ஆரம்பிப்பேன்: அண்ணாமலை பேட்டி