தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் 55 சதவீதத்தில் இருந்து 58 சவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,829 கோடி செலவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு மேல் மாசம் மூணு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். அதற்கு மேல் மூணு சதவீதம் சம்பள உயர்வு தேவையா? தொண்ணுறு சதவீத வரிப்பணத்தை ரெண்டு சதவீத மக்களுக்கு கொடுத்துவிட்டு, வட்டிக்கு கடன் வாங்கி இலவசம் கொடுப்பது தான் திராவிட மாடல்.
வேறு வழி இல்லை. கமிஷன் இல்லாத ஓட்டுக்கான வியாபாரம்.
election begger
3 சதவிகிதம் அப்படின்னா ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ 3 லட்சம் உயர்வு அப்படித்தானே
ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் த.வெ .க. தலைவர் விஜய் சந்தித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அகவிலைபடி உயர்வு. பயம் எப்படியெல்லாம் வேலைசெய்து பாத்தியா பையா.
ஊழியர்களே அதுல தேதி போட்டு இருக்கானு செக் பண்ணிக்கோங்க...
ஏதாவது பழைய அறிக்கையை எடுத்து கொடுத்து படிக்க சொல்லி இருக்க போறாக.
அள்ளிவிடும் அண்ணலே , என சுவர்களில் உபிகள் எழுதி கொண்டாடுவார்கள். அரசு ஊழியர்கள் பத்தலை பத்தலை கொஞ்சம் கூட பத்தலை என பதாதைகளை ஏந்தி கோசம் போடுவார்கள
எல்லாம் மறக்காம திமுக வுக்கு ஓட்டு போட்டுவீங்களா அதை நம்பி தான் கொடுக்கிறார்
எலக்ஷன் வருது. எலக்ஷன் வருது.. அகவிலைப்படி அறிவிக்கும் மாசமா இது? முக்கியமா உறுத்தும் விஷயம் என்னான்னா, களப்பணி ஆற்றுபவர்கள் தெண்டச்சம்பளம் வாங்கும் வாத்தியார்களும் லஞ்சத்தை பிரதான வருமானமாக ஆக்கிய அரசு ஊழியர்களும் ரொம்ப கஷ்டப்பட்டு களப்பணி ஆற்றுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு லஞ்சப்படி குடுத்தா தான் ஓட்டுச்சாவடியில் திருட்டு தீய முக ஊத்திக்காம பாத்துப்பாங்க. அள்ளி வுடு. எவன் அப்பன் வூட்டுப் பணம்?
கடன் வாங்கி கொடுக்கலாம்மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்: முந்தியது தேஜ கூட்டணி
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'
-
ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்
-
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்