நீதிபதி முன்பு காலணி வீச முயற்சி: ரவுடியால் நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ரவுடி கருக்கா வினோத், மற்றொரு வழக்கில் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிபதி மீது காலணியை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி மீது இவன் காலணி வீச முயல்வது இது இரண்டாவது முறையாகும்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது, கடந்த 2023ல் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய ரவுடி கருக்கா வினோத், 42, என்பவனை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்து, கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிண்டி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், இவ்வழக்கு, தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், கருக்கா வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில், கருக்கா வினோத் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிபதி மலர்விழி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, கருக்கா வினோத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள், புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.ஏற்கனவே, வழக்கு விசாரணையின் போது, கருக்கா வினோத் நீதிபதியின் மீது காலணியை வீசி தகராறில் ஈடுபட்டதும், அதன்பிறகு இந்த வழக்கின் விசாரணை 'வீடியோ கான்பிரன்ஸ்' மூலம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் சென்னை 6வது கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக கூறி கோஷமிட்ட ரவுடி, நீதிபதி மீது காலணியை வீச முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவனை பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, இதுபோன்ற குற்றவாளிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
வாசகர் கருத்து (15)
Gajageswari - mumbai,இந்தியா
14 நவ,2025 - 05:34 Report Abuse
ஒரு வழக்கை முடிக்க இவ்வளவு தாமதமாக 0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
13 நவ,2025 - 21:55 Report Abuse
டெல்லி வக்கீலுக்கு இவர் சீனியர். இதுவும் எதிர்ப்பில் தமிழக திராவிட மாடல் எதிர்ப்பு தான் போல. 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13 நவ,2025 - 20:48 Report Abuse
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக காலனிய கூறி கோஷமிட்ட ரவுடி, நீதிபதி மீது காலணியை வீச முயன்றார் வெட்கமாக இல்லை இந்த ஆளுக்கு காலணியே இல்லாமல் நடக்க விட வேண்டும் அப்போதுதான் தெரியும் அவன் படும் வேதனை 0
0
Reply
GMM - KA,இந்தியா
13 நவ,2025 - 18:31 Report Abuse
ரவுடி கருக்கா, கவர்னர், நீதிபதி, தலைமை செயலர்.. போன்ற முக்கிய அதிகாரிகள் மீது செருப்பு வீசலாம் என்ற எண்ணம் தோன்ற காரணம் மாநில போலீஸ் அவர்கள் நேரடி கட்டுபாட்டில் இல்லை என்று தெரிந்து தான். ஆனால் ஸ்டாலின் வீட்டு சுற்று சுவர் மீது செருப்பு வீசி உனது வீரத்தை காட்டினால், போலீஸ் உபதேசம் எப்படி இருக்கும் என்று புரியும். அதன் பின் வாழ்நாளில் செருப்பு போட மாட்டாய். செருப்பு கடை பக்கம் கூட போக மாட்டாய். குற்றம் என்று தெரிந்தும், சட்டதை மதியாத நபருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். 0
0
Reply
அப்பாவி - ,
13 நவ,2025 - 18:16 Report Abuse
காலணி வீசமுயன்ற குற்றத்திற்கு பின்பக்கம் நாலு விளாசும் தண்டனை குடுக்கலாமே.. ஆ.. ஊன்னா அமெரிக்கா, சிங்கப்பூர்னு ஆரமிச்சிருவாங்க. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
13 நவ,2025 - 18:11 Report Abuse
நிச்சயமாக இவன் திருட்டு தீயமுக சப்போர்ட்டில்தான் இப்படி செய்கிறான். இவனை உடனே தீர்த்து கட்டியிருக்கணும் அல்லவா? புலீஸ்காரர்கள் மீது இப்புடி பண்ணினால் அவர்கள் ஒரு வேளை ரோஷம் வந்து தீர்த்துக்கட்ட வாய்ப்புண்டு. நீதிபதிக்கு தால வாய்ப்பு இருக்காது. அல்லது கம்மியா இருக்கும். டமில் நாடு நம்பர் ஒன் மாநிலம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதுன்னு மட்டும் பீலா வுடுவாய்ங்க. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13 நவ,2025 - 17:41 Report Abuse
நீதிபதிகள் மீது காலணி வீச முயற்சிப்பது நீதிமன்றதில் அடிக்கடி வாடிக்கையாக போய்விட்டது. நல்ல நடைமுறையல்ல. 0
0
Reply
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
13 நவ,2025 - 17:00 Report Abuse
எதுக்கு அரசுக்கு வரி பணம் செலவு. போட்டுருங்க 0
0
Reply
krishna - ,
13 நவ,2025 - 16:54 Report Abuse
KUMBALUKKU MOST SUITABLE ROWDY. 0
0
Reply
theruvasagan - ,
13 நவ,2025 - 16:26 Report Abuse
இரண்டு கைகளிலும் மாவுக்கட்டு போடுவது அவசியம். சாப்பிட மற்றும் எந்த வேலைக்கும் கையை உபயோகப்படுத்த முடியாத வகையில். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!
-
குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!
-
வேப்பம்பூ ஜூஸ், முருங்கை ரொட்டி: பிரதமர் மோடியின் உணவுப் பழக்கமும்.. ஆரோக்கியத்தின் ரகசியமும்...
-
பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
Advertisement
Advertisement