மேகதாது விவகாரத்தில் திமுகவின் செயல் மன்னிக்க முடியாது: ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: மே கதாது விவகாரத்தில், கர்நாடகாவில் உள்ள குடும்பத் தொழிலை காப்பதற்காக, உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டில்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மவுனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.
அனைத்தையும் மீறி, சுப்ரீம்கோர்ட்டில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அப்பா அவர் பங்குக்கு அனை கட்டி கொனல்ல அனுமதி கொடுத்தது தமிழனின் வயிற்றில் அடித்தார் இப்போ மகன் அவர் பங்குக்கு செய்கிறார்.. தமிழன் இவர்களை அடித்து விரட்டாதவரை நிலமை மிகவும் மோசம் ஆகும்...
காவிரி நீர் பங்கீட்டில் என்றும் கர்நாடக அரசு ஞாயமாக நடந்து கொள்ளவில்லை. தமிழக அரசு தனது எதிர்ப்பை நீதிமன்றத்தில் பதிவு கூட செய்வதில்லை. மாநில நலனை விட கூட்டணி நலன் மிக முக்கியமாக படுகிறது.
பார்ரா உத்தம வில்லன் வந்துட்டாரு.
மத்தியிலும் கர்நாடகாவிலும் இந்தி கூட்டணிக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி ....
பழனி அப்பா பழனி அப்பா ராஜேந்திர பாலஜியை பாரு அப்பா. நாற்காலியின் உங்க அடியில் குண்டு வைக்கிறாரப்பா
பாரப்பா ! ராமச்சந்திரப்பா ! கண்ணைத் திறந்து கொஞ்சம் பாரப்பா ! சித்தராமையப்பா ! ராகுல் கானப்பா ! தமிழ்நாட்டிற்கு செய்யும் வஞ்சகச் சூழ்ச்சியை கொஞ்சம் பாரப்பா! பார்க்க முடியாவிட்டால் அதையும், அதையும் கொஞ்சம் மூடிக்கொண்டு சும்மா இருப்பா! ராமச்சந்திரப்பா !
தமிழகத்தில் மேகதாது கச்சத்தீவு என்று பேச ஆரம்பிக்கின்றன என்றாலே எலெக்சன் நெருங்கி விட்டது என்று புரிந்தது கொள்ள வேண்டியது தான்
மிக மிக சரியாக சொல்லியிருக்கிறார் . ஆரம்பத்தில் இருந்தே காவேரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் தவறிழைத்தவர் திராவிட தலைவர் கருணாநிதி . காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை தலைவர் கருணாநிதி நீக்கி விட்டார் . அந்த ஷரத்து இருந்திருந்தால் , அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் வழி இருந்திருக்கும் . சரி செய்தால் அடுத்த ஆட்சியையும் திமுக தான் அமைக்கும் .இது தமிழக மக்களின் சொல்லுறுதி
மழைக்காலங்களில் அபரிவிதமான காவேரி ஆற்று நீர் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. இதற்கு மறுப்பு ஏதும் இருக்க முடியாது. நீர் விரயத்தை தவிர்க்க முடியாதென்றாலும், குறைக்கலாமல்லவா? இதற்குத்தான் இந்த புதுப்புது அணைகள் கட்டும் திட்டம். காவிரி நீரை சேகரிக்க வேண்டுமென்றால், ஒன்று தமிழகம் அணை கட்ட வேண்டும், இல்லையேல் கர்நாடகம் அணை கட்டவேண்டும். தமிழகத்தில் காவிரி பாயும் பொழுது, ஒகேனக்கல் நீங்கலாக, பெரும்பாலும் சமவெளி பரப்பிலேயே செல்கின்றது. எனவே தமிழக மாகாண பரப்பிற்குள் புது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அவ்வளவாக இல்லையென்றே அறிய முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாகாண பரப்பிற்குள், அணை கட்டுவதற்கான பூகோள ரீதியான அமைப்புகள் சாத்தியமாக இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, கர்நாடக மாகாண பரப்பிற்குள் அணை கட்டுவதே சாலச்சிறந்தது. இதனால் பலனடையப்போவது இரு மாகாணங்களும் தான். சொல்லப்போனால் பூகம்பம் போன்ற ஆபத்து கர்நாடக மாகாணத்திற்க்கே அதிகம். அதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயமும் கர்நாடகத்திற்கே.
எனவே, பேராபத்தின்றி, செலவின்றி. இத்திட்டத்தால் பெரும்பயன் அடையப்போவது தமிழகமே. எனவே திமுக அரசு இத்திட்டத்தை எதிர்ப்பது போல எதிர்க்காமல் இருப்பதே சாலச்சிறந்தது என்றே தோன்றுகிறது.
அதிமுக கட்சி இதை வீணாக அரசியல் ஆக்குகிறது.
இப்போதே கர்நாடகா அணைகள் முழுவதுமாக நிரம்பினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப் படுகிறது. கூடுதலாக ஒரு அணையை கட்டும் பட்சத்தில் அதுவும் நிரம்பினால் மட்டுமே இனி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகும். இரண்டு, மூன்று வருடங்களாக மழைப் பொழிவு நன்றாக உள்ளதால் பிரச்சனை இல்லை. மழைப்பொழிவு குறையும் காலங்களில் கடுமையாக பாதிக்கப் படப் போவது தமிழக விவசாயிகளே. எனவே மேகதாது அணை கர்நாடகா கட்ட திட்டமிடுவதை தமிழகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அணை ஆற்றின் குறுக்கே தான் கட்ட முடியும். தமிழகத்தில் எங்கு கட்டலாம்? உபரி நீரை தேக்கி, தேவையான போது பயன் படுத்துவது வழக்கம். அணை கட்ட தன் பங்கு தொகையை தமிழகம் உறவுக்கு வழங்க வேண்டும். எதற்கு நீதிமன்றம் செல்கிறீர்கள்? இரு மாநில நிர்வாகம் பேசி தீர்க்க வழி தெரியாவிட்டால், அரசியலுக்கு எதற்கு வருகிறீர்கள்? எடப்பாடி எதிலும் அரசியல் செய்ய கூடாது. எடப்பாடி கூட்டணி முதல்வர் என்ற மாயையில் இருந்து விலக வேண்டும். இருமுறை திமுக வெற்றிக்கு எடப்பாடி காரணம்? தன் நிலை உணராவிட்டால், திமுகவை வெல்வது கடினம்.மேலும்
-
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
-
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் பாஜ, 2 தொகுதிகளில் காங்., முன்னிலை
-
பீஹார் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் யார் யார் முன்னிலை?
-
பீஹார் சட்டசபை தேர்தல்: முந்தியது தேஜ கூட்டணி
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது