தண்ணீரின்றி நெல் வயலில் வெடிப்பு விவசாயிகள் கண்ணீர் வடிப்பு
மேலுார்: குழிச்சேவல்பட்டி பகுதியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
குழிச்சேவல்பட்டிக்கு, இ.மலம்பட்டி 11வது கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் சின்ன பனையன், இடையன் கண்மாய் உள்ளிட்ட ஏழு கண்மாய்களும், நேரடி பாசனமாக நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலமும் பயன்பெறும். செப். 18ல் தண்ணீர் திறந்ததால் இப்பகுதி விவசாயிகள் ஜே.சி.எல்., வகை நாற்றுகளை விலைக்கு வாங்கி வயலில் நடவு செய்து 52 நாட்கள் ஆன நிலையில் ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன.
விவசாயி காளியம்மாள் கூறியதாவது: கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தேன். தண்ணீர் வராததால் வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளது.
பயிர்களின் வளர்ச்சி பாதித்துள்ளது. தண்ணீர் கேட்டு நீர்வளத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
தண்ணீர் இல்லாததால் விலைக்கு வாங்கிய நாற்றுகளையும் முழுமையாக நடவு செய்ய முடியாமல் விட்டு வைத்துள்ளோம். சொசைட்டியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திகைத்து நிற்கிறோம். மாவட்ட நிர்வாகம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்; ஓட்டு எண்ணும் பணி விறுவிறு
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'
-
ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்
-
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்